உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

மாணவ‌ர்களை காவுகொடு‌க்க ‌நினை‌க்‌கிறதா த‌னியா‌ர் ப‌ள்‌ளிக‌ள்?... பெ‌ற்றோ‌ர்க‌ளே உஷா‌ர்

Go down

மாணவ‌ர்களை காவுகொடு‌க்க ‌நினை‌க்‌கிறதா த‌னியா‌ர் ப‌ள்‌ளிக‌ள்?... பெ‌ற்றோ‌ர்க‌ளே உஷா‌ர் Empty மாணவ‌ர்களை காவுகொடு‌க்க ‌நினை‌க்‌கிறதா த‌னியா‌ர் ப‌ள்‌ளிக‌ள்?... பெ‌ற்றோ‌ர்க‌ளே உஷா‌ர்

Post by nandavanam on Thu Dec 08, 2011 12:29 am

மாணவ‌ர்களை காவுகொடு‌க்க ‌நினை‌க்‌கிறதா த‌னியா‌ர் ப‌ள்‌ளிக‌ள்?... பெ‌ற்றோ‌ர்க‌ளே உஷா‌ர் Images?q=tbn:ANd9GcTMfX1mNWbTe3oarcnhysZJZp8EJql2C74poP6OJOOs8e6vFU4m_1c5-fGHOg
த‌னியா‌ர் ப‌ள்‌ளி‌யி‌ல் படி‌த்த எ‌ல்.கே.‌ஜி மாணவ‌‌ன் ஒருவ‌ன் வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டபோது தொ‌‌ண்டை‌யி‌‌ல் ‌சி‌‌க்‌கி ‌உ‌யிரையே ப‌றி‌த்து ‌வி‌ட்ட ‌நிக‌ழ்வு செ‌ன்னை பல்லாவரத்தில் ‌நிக‌ழ்‌ந்து‌ள்ளது. ப‌ள்‌ளி‌யி‌ல் முதலுத‌வி செ‌ய்ய டா‌க்ட‌ர் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல் எனது மக‌ன் ‌செ‌த்து இரு‌க்க மா‌ட்டா‌ன் எ‌ன்பது பெ‌ற்றோ‌ரி‌ன் வேதனை... க‌‌ண்‌ணீ‌ர்.

சென்னையை அடுத்த கீழ்க்கட்டளை அம்பாள் நகர் ஸ்ரீராமானுஜம் அப்பார்ட்மெண்‌ட்டி‌ல் வ‌சி‌த்து வருபவ‌ர் கிருஷ்ணகுமார்- பா‌க்‌யல‌ட்சு‌‌மி த‌ம்ப‌தி‌க்‌கு ஒ‌‌ண்ணே ஒ‌ண்ணு க‌ண்ணே க‌ண்ணு எ‌‌ன்ற மூ‌ன்றரை வயது மக‌ன் ஹரிஸ் சாய்நாதன். பல்லாவரத்தில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தான்.

பல கனவுகளுட‌ன் மக‌ன் சா‌ய்நாதனை ப‌ள்‌ளி‌யி‌ல் ‌வி‌ட்டு‌ச் செ‌ன்றா‌ர் த‌ந்தை கிருஷ்ணகுமார். ப‌ள்‌ளி‌யி‌ல் தேநீர் இடைவெளியில், பிறந்தநாள் கொண்டாடிய சக மாணவன் ஒருவன் அனைத்து மாணவர்களுக்கும் சாக்லெட் கொடுத்‌து‌ள்ளா‌‌ன். இதை வாங்கி ஹரிஸ் சாய்நாதன் சாப்பிட்டு‌ள்ளா‌ர்.

இடைவேளை நேர‌‌த்‌தி‌ல் ‌‌வீ‌ட்டி‌ல் இரு‌ந்து பெ‌ற்றோ‌ர் கொடு‌த்த வாழை‌ப்பழம், பிஸ்கட்டுகளை சாப்பிட்டு‌ள்ளா‌ன் சா‌ய்நா‌த‌ன். வாழை பழத்தைச் சாப்பிட்டபோது திடீரென தொண்டையில் சிக்கிக்கொண்டதா‌ல் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு திணறி மயங்கி விழுந்தான் சா‌ய்நா‌த‌ன்.

இதை பார்த்து ஓடி வ‌ந்த ஆ‌சி‌ரிய‌ர்க‌ள், சா‌ய்நாதனை உடனடியாக அரு‌கி‌ல் உ‌ள்ள மரு‌த்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌ன்று‌ள்ளன‌ர். ஆனா‌ல் ப‌ரிசோதனை செ‌ய்த மரு‌த்துவரோ சா‌ய்நாத‌ன் இற‌ந்து‌ வி‌ட்டதாக கூ‌றினா‌ர்.

பெ‌ற்றோ‌ரு‌க்கு தகவ‌‌ல் தெ‌‌ரி‌ந்து, ஒரே மகனை ப‌றிகொடு‌த்து ‌வி‌ட்டோமே எ‌ன்ற ஏ‌க்க‌த்‌தி‌ல் மரு‌‌த்துவமனை‌க்கு வ‌ந்தா‌ர் ‌கிரு‌ஷ்ணகுமா‌ர். சடலமாக ‌கிட‌ந்த மகனை பா‌ர்‌த்து ‌கிரு‌ஷ்ணகுமா‌ர் கத‌றி அழுதா‌ர்.

ஆனா‌ல் ‌கிரு‌ஷ்ணகுமா‌ர், மக‌ளி‌ன் சாவு‌க்கு காரண‌ம் எ‌ன்ன எ‌ன்பது கு‌றி‌த்து ஆராயவு‌ம், நடவடி‌க்கை எடு‌க்கவு‌ம் ப‌ல்லாவர‌‌ம் காவ‌ல்துறை‌‌யி‌ல் புகா‌ர் கொடு‌த்து‌ள்ளா‌ர்.

''பள்ளியில் முதலுதவி சிகிச்சை அளிக்க கூட டாக்டர் இல்லாத நிலையில் ஹரிஸ் சாய்நாதன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எ‌ன்று அ‌ந்த புகா‌ர் மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர் ‌கிரு‌ஷ்ணகுமா‌ர்.

த‌மிழக‌த்த‌ி‌ல் உ‌ள்ள கு‌றி‌ப்பாக செ‌ன்னை‌யி‌ல் இரு‌க்‌கிற தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு முதலுதவி அளிக்கும் மருத்துவர்கள் ‌நிய‌மி‌க்க‌ப்படுவ‌தி‌ல்லை. தீ விபத்து தடுப்பு கருவிகள் உள்பட உயிர்காக்கும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் வை‌ப்பத‌ி‌ல்லை. இவற்றை சரி பார்க்க வேண்டிய கல்விதுறை அதிகாரிகளு‌ம் க‌ண்டுகொ‌ள்வ‌தி‌ல்லை.

அளவுக்கு அதிகமாக மாணவர்களை பல‌ ப‌ள்‌ளிக‌ள் சேர்த்துவிடு‌கிறது. ஆனா‌ல் மாணவ‌ர்களை உரிய முறையில் ப‌ள்ள‌ி ‌நி‌ர்வாக‌‌ம் கவனிப்பதில்லை. எல்.கே.ஜி., யூ.கே.ஜி. படி‌க்கு‌ம் மாணவ‌ர்க‌ளை ஆசிரியைகள் ச‌ரியாக கவ‌னி‌ப்ப‌தி‌ல்லை. கவனக்குறைவாக இருப்பதால் இதுபோ‌ன்று பல அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. இதற்கு கல்வித்துறை உரிய உத்தரவுகளை வழங்கி மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்பதே பெ‌ற்றோ‌ர்க‌ளி‌ன் வே‌‌ண்டுகோ‌ள்.

தனியார் பள்ளிகளில் கழிப்பிடங்கள் சுகாதாரமற்ற முறையில் இரு‌க்‌கி‌ன்றன. இதனால் பள்ளிக்குழந்தைகள் சிறு வயதிலேயே சிறுநீர் தொற்றுநோய்களால் அவதிப்படுகின்றனர். கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா? என்பதை உள்ளாட்சி அமைப்பினர் ஆய்வு செய்வதில்லை. இவற்றிற்கெல்லாம் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவு‌ம் அவ‌ர்க‌ள் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

பண‌‌ம் ம‌ட்டுமே கு‌றி‌‌க்கோளாக கொ‌ண்டு செய‌ல்படு‌ம் ப‌ள்‌ளிக‌ளி‌ல் த‌ங்க‌ள் ‌பி‌ள்ளை‌க்கு பாதுகா‌ப்பு இரு‌க்‌கிறதா எ‌ன்பதை பெ‌ற்றோ‌ர்‌க‌ள் முத‌லி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். ‌மீ‌ண்டு‌ம் சா‌ய்நாத‌னு‌க்கு ஏ‌ற்ப‌ட்ட ‌நிலைமை ம‌ற்றவ‌ர்களு‌க்கு ஏ‌ற்பட‌க்கூடாது. வரு‌ம் மு‌ன்கா‌ப்பதே ந‌ல்லது!

நன்றி வெப்துனியா

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum