உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

ஒருமை‌ப்பா‌ட்டை ‌சீ‌ர்குலை‌க்க முய‌ல்‌கிறதா கேரளா!

Go down

ஒருமை‌ப்பா‌ட்டை ‌சீ‌ர்குலை‌க்க முய‌ல்‌கிறதா கேரளா!

Post by nandavanam on Tue Dec 06, 2011 3:56 am

சில காலமாக அட‌ங்‌கி போ‌ய் இரு‌ந்த மு‌ல்லை‌‌ப் பெ‌ரியாறு அணை ‌பிர‌ச்சனை த‌ற்போது ‌வி‌‌‌‌‌ஸ்வரூப‌ம் எடு‌த்து‌ள்ளது. அணையை இடி‌த்தே ‌தீருவோ‌ம் எ‌ன்று கேரள அரசு க‌ங்கண‌ம் க‌ட்டி அ‌றி‌வி‌த்து‌ள்ளது த‌மிழக‌த்‌தி‌ல் பெரு‌ம் கொ‌ள்த‌ளி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அணை ‌விவகார‌த்‌தி‌ல் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கிய பிறகும், கேரள அரசு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு சவால் ‌விடு‌‌ம் வகையில், 2006ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி கேரள சட்டமன்றத்தில் கேரள நீர்ப்பாசனம், தண்ணீர் சேமிப்புத் திருத்த மசோதா 2006 கேரள சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு 2006 மார்ச் 18ஆம் தேதி சட்டமாக அரசிதழில் வெளியி‌ட்டது. இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு முதன்முறையாக ஜனநாயக விரோத சட்டம் கேரளாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இ‌ப்படி கேரளா அர‌சி‌ன் நடவடி‌க்கை படி‌ப்படியாக அ‌திக‌ரி‌‌க்க தொட‌ங்‌கியது. த‌ற்போது வ‌ன்முறையை தூ‌ண்டு‌ம் வகை‌யி‌ல் கேரளா அரசு நட‌வடி‌க்கைக‌ள் மா‌றியு‌ள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி எதிர்க்கட்சி கூட்டணி, பா.ஜ.க. உ‌ள்பட கேரளாவில் உள்ள அனைத்து கட்சிகளும் முல்லை‌ப் பெரியாறு அணை அருகே புதிய அணை க‌ட்டியே ‌‌தீர வே‌ண்டு‌ம் எ‌ன்ற கோஷ‌த்தை கை‌யி‌ல் எடு‌த்து‌க் கொ‌ண்டு வ‌ன்முறை‌யி‌ல் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் கூட கேரள இளைஞர் காங்கிரசார் முல்லை‌ப் பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணைக்குள் அத்துமீறி நுழைந்து ஷட்டர்களை உடைக்க முயன்றனர். நேற்று பா.ஜ.க.வை சே‌ர்‌ந்த இளைஞர் அணியினர் அணையை உடைக்கும் நோக்கத்துடன் கடப்பாரை, மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் கும்பலாக வந்தவ‌ர்களை போலீசார் தடுத்து‌ள்ளன‌ர்.

தமிழகத்தை சேர்ந்த வாகன‌ங்க‌ள் ‌மீது தா‌‌க்குத‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. இ‌தி‌ல் கொடுமை எ‌ன்னவெ‌ன்றா‌ல் குமுளி போலீஸ் நிலையம் அருகிலேயே இந்த சம்பவம் அர‌ங்‌கே‌றி உ‌ள்ளது. கேளர போலீசார் கைகளை க‌ட்டி‌க் கொ‌ண்டு வேடி‌க்கை பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

கேரளா அர‌சி‌ன் இ‌ந்த செய‌லை த‌மிழக‌த்‌தி‌ல் பெரு‌ம் கொ‌‌ந்த‌ளி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. ஆ‌ங்கா‌ங்கே பல போரா‌ட்ட‌ங்க‌ள் நட‌ந்து கொ‌‌ண்டுதா‌ன் இரு‌க்‌கிறது. ம‌த்‌திய அரசு இத‌ற்கு ஒரு‌ ‌தீ‌ர்வு காணா‌வி‌ட்டா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் ஒருமை‌ப்பாடு க‌ண்டி‌ப்பாக பா‌தி‌க்க‌ப்ப‌டு‌ம்.

அதோடு த‌மிழக, கேரள ம‌க்க‌ளிடையே ‌பி‌ரி‌வினை ஏ‌ற்படுவதோடு பல ‌விளைவுகளையு‌ம் இரு மா‌நில ம‌க்களு‌ம் ச‌ந்‌தி‌க்க நே‌ரிடும். த‌ற்போது ம‌த்‌தி‌யி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சிதா‌ன் ஆ‌ண்டு வரு‌கிறது. இ‌ந்த ‌மித‌ப்‌பி‌ல்தா‌ன் கேரளா‌‌வி‌ல் ஆ‌ட்‌சி நட‌த்‌தி வரு‌ம் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி ஆ‌ட்ட‌ம் போடு‌கிறது.

த‌மிழக‌‌ம்தா‌ன் கேரளாவுக்கு உணவு தானியங்கள், பால், காய்கறிகள், கால்நடைகள் போன்றவற்றைக் கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றது. முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்படுமேயானால் இரு மாநில மக்களிடையேயான உறவுகள் பாதிக்கப்படுவதோடு, எதிர்பாராத பின்விளைவுகள் ஏற்படும். இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு மத்திய அரசு புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியை ஆர‌ம்‌பி‌த்‌திலேயே தடு‌க்க வே‌ண்டு‌ம், இ‌ல்லையெ‌ன்றா‌ல் கேரளாவா‌ல் ஒருமை‌ப்பாடு ‌சீ‌‌ர்குலைவது உறு‌தி.

நன்றி வெப்துனியா

nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum