உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

தமிழனுக்காக கவலைப்படுகிறாரா?சிரிப்பு வருது!

View previous topic View next topic Go down

தமிழனுக்காக கவலைப்படுகிறாரா?சிரிப்பு வருது!

Post by nandavanam on Tue Nov 29, 2011 4:06 am

ஆடு நனைவதை எண்ணி ஓநாய் அழுத கதையை, கருணாநிதி சமீபகாலமாய், மக்களுக்கு உணர்த்தி வருகிறார். பஸ் கட்டண உயர்வை, நாளிதழ்களுக்கே தெரியாதபடி அறிவிக்கப்படாமல் அமல்படுத்தியதை, தமிழர்களாகிய நாம் மறக்கத்தான் முடியுமா?"மின்பற்றாக்குறைக்கு தி.மு.க.,வே பொறுப்பு. அதனால், தோல்வி ஏற்படலாம்' என, உரக்கக் கூறிய ஆற்காட்டாரின் வாக்கியத்தையும் நினைக்காமல் தான் இருக்க முடியுமா?முதல்வர் ஜெயலலிதா கூறியது போல், தமிழர்களாகிய நமக்காக, நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதியின் உச்சகட்ட காமெடி எதுவெனில், அது மதுக்கடை சாடல் அறிக்கை தான்."தமிழனுக்கு எத்தனை பட்டாலும் புத்தி வராது' என, முரசொலி நாளிதழில், அடுத்தவர் மூலம் சாடிய கருணாநிதி, மதுக்கடையின் "எலைட் பார்' வகைகளை சாடி, அரசை மட்டுமன்றி, தமிழர்களையும் ஏளனப்படுத்தியுள்ளார். தமிழர்களை மீளாக் கடன்காரர்களாக்கி விட்டு, இலவசங்களை அள்ளி வீசும் வித்தையை, மதுக்கடை வருமானத்தின் மகத்தான துணையுடன், பிற மாநிலங்களுக்கு கற்றுத் தந்த விஞ்ஞான மூளைக்காரரான கருணாநிதி, இன்று மதுக்கடையின் வளர்ச்சி பற்றி கவலைப்படுவது, நமக்காகத்தான் என, எந்தத் தமிழனாவது நினைத்தால், அது அவர்களின் அறியாமையேயாகும்.மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என, ராமதாசுக்கு அல்வா கொடுத்து, கூட்டணியை பலப்படுத்திய கருணாநிதி, மக்கள் அளித்த தேர்தல் தீர்ப்பில் நிலைகுலைந்து போயுள்ளார் என்பதே நிதர்சன உண்மை. மதுவிலக்கை மனதளவிலும், தன் ஆட்சிக்காலத்தில் நினைத்து பார்க்காத கருணாநிதி, ஒரு வேளை மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருந்தால், "எலைட் பாரும்' அறிவிக்கப்படாத திட்டத்தில் சார்ந்திருக்கும். "கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை' என்ற புதுமொழி போல், டாஸ்மாக் வருமானத்தையும் நம்பிக்கொண்டு, "அ.தி.மு.க., ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள்' என்ற வெறுப்பில், ஐந்துமுறை சம்பள உயர்வாக மொத்தத் தொகையே ஆயிரம் கூடத்தொடாத அளவிற்கு மறைமுகமாக பழி தீர்த்தவர் கருணாநிதி என்பதை, டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் அறிவர்.ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரைப்போல் "மதுவிலக்கு' என கருணா
நிதியால் அறைகூவல் விடமுடியுமா? முடியாது.

எழுதியவர் ச.ஜான் பிரிட்டோ

avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum