உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மாநிலங்களிடையே தேவை ஒருமைப்பாடு!

Go down

மாநிலங்களிடையே தேவை ஒருமைப்பாடு! Empty மாநிலங்களிடையே தேவை ஒருமைப்பாடு!

Post by nandavanam Sun Nov 20, 2011 4:10 am

மாநிலங்களிடையே தேவை ஒருமைப்பாடு! Image43

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை மட்டுமல்லாது, பல்வேறு விஷயங்களிலும் தமிழகத்துக்கு விரோதமான காரியங்களில் அந்த மாநில அரசு, நீண்ட நாள்களாகவே ஈடுபட்டு வருவதை அறிவோம்.

தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதில் கர்நாடகம், கேரளம் இரு மாநிலங்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை எனலாம். அதேநேரத்தில் தமிழகத்திலிருந்து அம் மாநிலத்துக்கு பல்வேறு தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.

ஏமாந்தவன் தமிழன் என்று கூறுவார்கள். இதற்கு யார் காரணம் என்று பார்த்தால் ஆட்சியாளர்கள்தான். தமிழக மாநில கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் இன, மொழி, மத வேறுபாடுகளைக் கடந்து செயல்திட்டங்களைத் தீட்டுகின்றன.

தமிழகத்திலிருந்து பெரும்பாலான பொருள்கள் கேரளத்துக்குச் செல்கின்றன. குறிப்பாக காய்கறி, பழங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தினமும் கேரள மக்களின் பயன்பாட்டுக்குப் பெரிதும் உதவுகின்றன.

இதைவிட பெரிதாகக் கூறவேண்டுமானால் தமிழகத்திலிருந்து தினமும் ஆற்று மணல் பெருமளவில் கேரளத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல தினமும் கட்டுமானப் பொருள்களான கருங்கற்கள், செங்கல் போன்றவையும் கொண்டு செல்லப்படுகின்றன.

தமிழக ஆறுகளில் இருந்து அள்ளப்படும் மணலை அதிக தொகை கிடைக்கிறது என்பதற்காக அம் மாநிலத்துக்கு விற்கின்றனர் சிலர். இதனால் பாதிக்கப்படுவது தமிழகம்தான். மேலும் தமிழகத்தில் ரேஷன் அரிசி இலவசமாக விநியோகிக்கப்படுவதால் அவற்றை கொண்டுசென்று வருவாய் ஈட்டுபவர்கள் பலர். இதுதான் என்றில்லை.

கால்நடைகளுக்கு வைக்கோல் கிடைக்காமல் தமிழகத்தில் பலர் தங்கள் கால்நடைகளை விற்றுவிட்டனர்.

இதற்குக் காரணம் இங்கு கிடைக்கும் வைக்கோல் தென்மாவட்டங்கள் வழியாக கேரளத்துக்குக் கொண்டு செல்லப்படுவதுதான்.

வைக்கோல் பஞ்சம் ஏற்பட இதுவும் காரணம் என்றால், கால்நடைகளை அடிமாட்டுக்காக கடத்திச் செல்வது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. தினமும் இரவு நேரங்களில் கால்நடைகளை லாரிகளில் அடைத்துப் போட்டு கேரளத்துக்கு கொண்டு செல்லும் வியாபாரிகள் ஏராளம்.

இப்படி அனைத்துமே தமிழகத்திலிருந்துதான் அம் மாநிலத்துக்குச் செல்கின்றன.

போதாக்குறைக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் கடற்பகுதிகளில் கிடைக்கும் தரமான மீன்களைக் கேரள வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்லும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.

இதனால் மீன் விலை உயர்கிறது. வைக்கோல் விலை தாறுமாறாக இருக்கிறது. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற கதையாக அனைத்தையும் தமிழகத்திலிருந்து பெற்றுக்கொண்டு, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிடிவாதம் பிடிப்பதும் அம் மாநிலத்துக்கு அழகல்ல.

தமிழக அரசு மாநில ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படாதவாறு நடந்து கொள்வதை கேரளம் எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழகத்தில் இருந்து மின்சாரமும் பிற மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்கள் மட்டும் வேற்றுமையுணர்வை வளர்ப்பது விந்தையாக இருக்கிறது.

நன்றி தினமணி


nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum