உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

இந்தியாவின் ராஜபாட்டையால் யாருக்கு லாபம்?

View previous topic View next topic Go down

இந்தியாவின் ராஜபாட்டையால் யாருக்கு லாபம்?

Post by nandavanam on Sun Nov 13, 2011 3:55 am

வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் முக்கிய நகரங்களான
சென்னை,கொல்கத்தா,மும்பை,டெல்லி ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய
நெடுஞ்சாலைத் திட்டம் தங்க நாற்கரசாலைத் திட்டம் என்று பெருமை
படுத்தப்பட்டு, தொடங்கப்பட்டது! இன்று நன்குவழிப் பாதை, ஆறுவழிப் பாதையாக
மாற்றப் பட்டு வருகிறது! இந்த திட்டத்தை தொடங்கியபோதே, அமெரிக்காவின்
ஆதிக்க வெறிக்கும், அவர்களது எதிர்கால இந்திய சுரண்டலுக்கும்
கொள்ளைக்கும்தான் செய்கிறார்கள் என்று எனது விடியலும் விடுதலையும் என்ற
சிறு நூலில் சுட்டிக்காட்டி இருந்தேன்! தரிசு நிலா மேம்பாடு திட்டம்,
போக்குவரத்துக்களை சீர்குலைக்கும் செயல்கள் மூலம் போக்குவரத்தை தனியாருக்கு
தாரைவார்க்கும் எண்ணம், ஆகியவைகளைப் பற்றி இன்று திட்ட கமிசன் துணைத்
தலைவராக இருக்கும் மண்டேக்ஸ் சிங் அலுவாலியா பொருளாதார மாற்றத்திற்காக
வழங்கியிருந்த ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் காட்டி எழுதியிருந்தேன்!

அன்று சொன்னது, இப்பொது நடந்து வருகிறது! கார்கில் என்றொரு உலக அளவில் உணவுப் பொருட்களை விற்பனைசெய்யும் நிறுவனத்தின் பணி என்னவென்றால், உலகில் எங்கு,என்ன பொருள் விளைவிக்க முடியுமோ அத்தனை உற்பத்தி செய்து, எங்கு அதிகவிலை கிடைக்கிறதோ அங்கு கொண்டுசென்று, அத்தனை விற்பதுதான்! மேலோட்டமாக பார்த்தால், எல்லோரும் கடைபிடிக்கும் நியாயமான வழிமுறையாக இதுதொன்றும்! இந்தோனேசியா,கியுபா , போன்ற நாடுகளில் சர்க்கரை அதிகம் கிடைக்கும் ஆனால் அந்த நாட்டு மககளுக்கு சர்க்கரை கிடைக்காது, இந்தியாவில் அதிகம் இப்போது கிடைக்கும் கோதுமை, அரிசி போன்றவை எதிகாலத்தில் இந்தியர்களுக்கு கிடைக்காது! காரணம் இவைகளை உற்பத்தி செய்யும் நிலங்கள், பத்தாயிரம் இருபதாயிரம் ஏக்கர் கொண்ட பண்ணை நிலங்களாக, அன்னியர் கைகளில் இருக்கும்! அந்நியர்களின் கைகளில் ஒப்படைக்கும் அற்புத பணிக்குத்தான் இந்திய அரசாங்கம், தரிசு நில மேம்பாடு திட்டத்தை கொண்டுவந்துள்ளது!

தரிசாக இருக்கும் நிலங்களில் மாற்றம் கொண்டுவருவது, நல்லதுதானே?
என்பவர்களுக்கு... இருக்கிற நிலத்துக்கு தண்ணீர்
கிடைக்காது,விவசாயிகளுக்கு வழங்கிவரும் உரம்,பூச்சிமருந்து,ஆகியவற்றின்
மானியம் ரத்து செயயபடுகிறது.டீஸல், பெட்ரோல் விலை உயர்வும் பாதிக்கிறது.,
இப்போது விவசாயம் செய்வதற்கு ஆளில்லை, அப்படியே செய்தாலும் நஷ்டம்தான்
வருகிறது! விளைவு? இந்தியாவில் உள்ள விளைநிலங்கள் திட்டமிடலுடன் அரசாங்கமே
உதவிசெய்து, தரிசாக்கப் படுகின்றன!. மேலும் விரைவில் தரிசாக வேண்டும்
என்பதற்கு மலட்டு விதைகள், காட்டாமணக்கு போன்ற பயிர்களை பயிரிட
சொல்கிறார்கள்! விவசாய நிலம் தரிசாகிறது, இப்படி தர்சாக்கப் படும் நிலம்,
தனியாரின் பண்ணை நிலமாகும், நிலத்தை இழந்த மண்ணின் மைந்தர்கள்,சொந்த
மண்ணில்,சொந்த நாட்டில கூலிகளாக,அடிமை சேவகம் செய்வர்! விளைவிக்கும்
பொறுப்பு மட்டுமே அவர்களுக்கு இருக்கும்! விலைபொருள் அன்னியரது
உரிமையாகும்!


அப்புறம் அத்தனை ஒரோ இடத்தில இருந்து மற்றொரு இடத்துக்கும், துறைமுகங்கள், விமானநிலையங்கள் போன்றவற்றிக்கு எடுத்துசெல்ல ரோடு வசதி வேண்டும் இல்லையா? அதற்காக போடப் பட்டுள்ளது தான் இந்தியாவின் ராஜபாட்டையான, தேசிய நெடுஞ்சாலைகள்! இந்த நெடுஞ்சாலைகளில் இப்போதே சுங்கவசூல் கொள்ளை நடந்து வருகிறது! நமது மக்கள் பிரதிநிதிகளும், மந்திரிகளும் மட்டுமே கப்பம் கட்டாமல், கார்களில் இப்போது பவனிவருகின்றனர்!
யாருக்காக...? இந்த ராஜ்யமும், இந்திய ராஜபாட்டையும் யாருக்காக ? நமது இறையாண்மை எங்கே போயகொண்டிருகிறது? என்று கேட்கவேண்டியுள்ளது!


எழுதியவர் ஓசூர் ராஜன்


avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum