உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

ஜெயலலிதாவுக்கு ஏ‌ன் இ‌ந்த ‌சிறு‌பி‌ள்ள‌ை‌த்தன‌ம்!

View previous topic View next topic Go down

ஜெயலலிதாவுக்கு ஏ‌ன் இ‌ந்த ‌சிறு‌பி‌ள்ள‌ை‌த்தன‌ம்!

Post by nandavanam on Wed Nov 09, 2011 3:43 am

செ‌ன்னை கோ‌ட்டூ‌ர்புர‌த்‌தி‌ல் உ‌ள்ள அ‌ண்ணா நூ‌ற்றா‌ண்டு நூலக‌த்தை குழ‌ந்தைக‌ள் நல மரு‌த்துவமனையாக மா‌ற்ற முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா தலைமை‌யிலான அமை‌ச்சரவை கூடி முடிவு செ‌ய்து‌ள்ளது. பு‌திய தலைமை‌ச் செயலக‌ம் மா‌ற்ற‌த்தை தொட‌ர்‌ந்து அடு‌த்த ஒரு அ‌திரடி நடவடி‌க்கையை எடு‌த்து‌ள்ளா‌ர் ஜெய‌ல‌‌லிதா.

கட‌ந்த ‌தி.மு.க ஆ‌ட்‌‌சி‌யி‌ல் ஜா‌ர்‌‌‌‌ஜ் கோ‌ட்டை‌யி‌ல் செய‌ல்ப‌ட்டு வ‌ந்த தலைமை‌ச் செயல‌ம் இட‌ நெரு‌க்கடி காரணமாக செ‌ன்னை அர‌சின‌‌ர் தோ‌ட்ட‌த்‌தி‌ல் 1000 ‌கோடி ரூபா‌ய் செல‌‌வி‌ல் பு‌திய தலைமை‌ச் செயலக‌த்தை க‌ட்டினா‌ர் அ‌ப்போதைய முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி. 6 மாடிக‌ள் கொ‌ண்ட நவீன கட்டிடம் பசுமை கட்டிடமாக ஜெர்மன் தொழில்நுட்பம், திராவிட கலாசாரத்துடன் உருவாக்கப்பட்டு அந்த வளாகத்திற்கு ஓமந்துரார் பெயரும் சூட்டப்பட்டது.

குளுகுளு வசதி, மின் தூக்கிகளுடன் உருவாக்கப்பட்ட சட்டமன்ற பேரவை, சட்டமன்ற பேரவை செயலகம், முதலமை‌ச்ச‌ர், அமைச்சர்களின் அறைகள், நிதி, உள்துறை போன்ற முக்கிய துறைகளும் செயல்பட்டு வந்தன. ரூ.1000 கோடியை தாண்டி அடுத்த கட்டமாக தலைமை செயலக அலுவலகங்கள் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. இதற்காக 7 மாடி கட்டிடம் கட்டும் பணியும் நடைபெ‌ற்றது. சட்டமன்ற மேலவை வளாகம் மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான குடியிருப்பு கட்டும் பணிகளும் மின்னல் வேகத்தில் நடந்து வந்தன.

பு‌திய தலைமை‌‌ச் செயல‌க க‌ட்டிட‌ப் ப‌‌ணிக‌ள் முடிவடையாத ‌நிலை‌யி‌ல் ‌பிரதம‌ர் ம‌ன்மோ‌க‌ன் ‌சி‌ங் மூல‌ம் ‌திற‌‌ப்பு ‌விழாவையு‌ம் நட‌த்‌தி முடி‌த்து‌வி‌ட்டா‌ர் கருணா‌நி‌தி. கட‌ந்த ‌2010ஆ‌ம் ஆ‌ண்டு மா‌ர்‌‌ச் 13ஆ‌ம் தே‌தி ‌திற‌க்க‌ப்ப‌ட்ட க‌ட்டிட‌த்த‌ி‌ல் 2 முறை ச‌ட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌த்தையு‌ம் நட‌த்‌தி கா‌ட்டினா‌ர் கருணா‌நி‌தி.

வரலா‌ற்று ‌சிற‌ப்புமி‌க்கதா‌ய் ‌திக‌ழ்‌ந்த இ‌ந்த பு‌திய த‌லைமை‌ச் செயலக‌த்தை செய‌ல்படாம‌ல் முட‌க்‌கினா‌ர் ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்த ‌சில நா‌ட்க‌ளி‌ல் ஜெயல‌லிதா. கட்டிட பணிகள் அனை‌த்து‌ம் நிறுத்தப்பட்டதுடன் கட்டிடம் பற்றிய விசாரணை கமிஷனும் அமை‌த்தா‌ர். இந்த கட்டிடத்தில் நவீன மருத்துவமனை அமைக்கப்படும் எ‌‌ன்று‌ம் அ‌றி‌வி‌த்தா‌ர் ஜெய‌ல‌லிதா.

விசாரணைக் கமிஷன் அமை‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் கட்டிடத்தில் மின்சாரம் உள்பட அனைத்து வசதிகளும் நிறுத்தப்பட்டு விட்டது. பாழடைந்து கிடக்கும் பு‌திய தலைமை‌ச் செயலக கட்டிடத்தில் பெயரளவுக்கு சில பணியாளர்கள் வந்து செல்கின்றனர். இரவில் சமூக விரோ‌திக‌ளி‌ன் கூடாராமாக மா‌றி‌வி‌ட்டதா‌ம்.

ஜா‌‌ர்‌ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த செம்மொழி தமிழாய்வு நூலகமும் இங்கு மாற்றப்பட்டு விட்டது. அங்கிருந்த நூல்கள் இங்குள்ள ஒரு அறையில் குவியலாக கிடக்கின்றன. மழை‌ ‌‌நீ‌ர் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. அறைகளின் உட்புறமுள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு‌ வி‌ட்டன. நாற்காலிகள், மேஜைகளும் வேறு இடங்களுக்கு மா‌ற்ற‌ப்பட உ‌ள்ளதாக தெ‌ரி‌கிறது.

மு‌ன்னா‌ள் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியா‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்ட பு‌திய தலைமை‌ச் செயலக‌‌‌ம் மூடு‌விழாவை தொட‌ர்‌ந்து த‌ற்போது கோ‌‌ட்டூ‌ர்புர‌த்‌தி‌ல் உ‌ள்ள அ‌ண்ணா நூ‌ற்றா‌ண்டு நூலக‌த்தை மூட ‌தி‌‌ட்ட‌மி‌ட்டிரு‌க்‌கிறா‌ர் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா. 172 கோடி ரூபா‌‌ய் செ‌ல‌வி‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்ட இ‌ந்த நூலக‌த்தை குழ‌ந்தை நல மரு‌த்துவமனையாக மா‌ற்ற‌‌ப்போ‌கிறா‌ர் ஜெயல‌லிதா.

வரலா‌ற்று ‌சிற‌ப்பு ‌மி‌க்க நூலக‌‌ம் த‌மிழக‌த்‌தி‌ல் அமை‌ந்து‌ள்ளதை பா‌ர்‌த்து ம‌ற்ற மா‌நில ம‌க்க‌ள் மு‌த‌ல் அய‌ல்நா‌ட்டினரு‌ம் பாரா‌ட்டின‌ர். த‌ற்போது அ‌ந்த நூலக‌த்து‌க்கு‌ம் ஆ‌‌ப்பு வை‌க்க முடிவு செ‌ய்து‌வி‌ட்டா‌ர் ஜெயல‌லிதா. மு‌ந்தைய அரசு கொ‌ண்டு வ‌ந்த ‌தி‌ட்ட‌த்தை கை‌விடுவது அடு‌த்து வரு‌ம் ஆ‌ட்‌சி‌யி‌ன் நடைமுறை. ஆனா‌ல் ம‌க்க‌ளி‌ன் பல கோடி ரூபா‌‌ய் வ‌‌‌ரி‌ப் பண‌த்‌தை மேலு‌ம் மேலு‌ம் ‌‌வீண‌‌டி‌ப்பது எ‌ந்த‌வித‌த்த‌ி‌ல் ‌நியாய‌ம்.

மழையா‌ல் த‌மிழகமே த‌ற்போது ‌சி‌ன்னா‌பி‌‌ன்னமா‌கி இரு‌‌க்‌கிற ‌இ‌ந்த நேர‌த்‌தி‌ல் ம‌க்களை கவ‌னி‌க்காம‌ல் கட‌ந்த ஆ‌ட்‌சி‌யி‌ல் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்ட வரலா‌ற்று ‌‌சிற‌ப்பு‌மி‌க்க க‌ட்ட‌த்தை மா‌ற்றுவது ‌‌வீ‌ண்செலவு. பு‌திய தலைமை‌ச்‌ செயலக‌த்தையு‌ம், அ‌ண்ணா நூ‌ற்றா‌‌ண்டு நூலக‌த்தையு‌ம் மரு‌த்துவமனையாக மா‌ற்ற எ‌த்தனை கோடியாகு‌ம். அ‌ந்த பண‌த்தை மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ம‌க்களு‌க்கு முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா கொடு‌க்கலாமே. ம‌‌க்க‌ள் பண‌த்தை ம‌க்களு‌க்காக செலவு செ‌‌ய்ய‌த்தா‌ன் ஆ‌ட்‌சியாள‌ர்க‌ள் இரு‌க்க வே‌‌ண்டு‌ம். அதை‌வி‌ட்டு‌வி‌ட்டு தேவைய‌ற்ற செலவுகளை அரசு செ‌ய்யாம‌ல் இரு‌ந்தாலே போது‌ம் எ‌ன்பதே ம‌க்க‌ளி‌ன் எ‌ண்ண‌ம்.

நன்றி வெப்துனியா


avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum