உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கனிமொழி ஜாமீன் கனியாத காரணம் என்ன?

2 posters

Go down

 கனிமொழி ஜாமீன் கனியாத காரணம் என்ன? Empty கனிமொழி ஜாமீன் கனியாத காரணம் என்ன?

Post by nandavanam Sat Nov 05, 2011 3:43 am

 கனிமொழி ஜாமீன் கனியாத காரணம் என்ன? Q1

நாடே பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த்து கனிமொழிக்கு ஜாமீன் இம்முறை கனிந்துவிடும் என்று. ஆனால், கனிமொழியின் ஜாமீன் மனுவை நான்காவது முறையாக நீதிபதி சைனி நிராகரித்துவிட்டார்.


இம்முறை கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தி.மு.க. தரப்புக்கு எப்படி வந்தது என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாடே அறியும். மேலும், இரு வாரங்களுக்கு முன்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி டெல்லி சென்ற போது பிரதமரையும் சோனியாவையும் சந்தித்தார்.


அந்த செய்திகளே, தன் மகளை இந்த முறையாவது விடுவிக்க வழி வகை காணுமாறு சோனியாவிடமும் பிரதமரிடமும் கருணாநிதி கோரிக்கை வைத்தார் என்று தகவல்கள் பரவின. இதுமட்டுமா, நீதித்துறையிலும் பேசியாகிவிட்டது என்ற செய்தியெல்லாம் பரப்பி விடப்பட்டது.


செப்டம்பர் மாதம் 23ம் தேதி வந்த ஜாமீன் மனுவை, நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். உடனே, கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தி.மு.க.வுக்கு அபராமாக உருவானது. காரணம், குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துவிட்டால், அந்த கோர்ட்டிலேயே ஜாமீன் பெற அணுகலாம் என்று தான் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்ததே தவிர, குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துவிட்டதும் கீழ் கோர்ட் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லவில்லை.


இதெல்லாம் ஒரு புறம் இருக்க, நவம்பர் 3ம் தேதி வந்துவிடுவார் என்ற அதீத நம்பிக்கையில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏகப்பட்ட தி.மு.க.வினரை அனுப்பி டெல்லி செய்தித்தாள்களில் பரபரப்பான செய்தியை வரவழைத்த்தும் பெரும் தவறாகவே படுகிறது..


இதையெல்லாம் முன்கூட்டியே செய்யும் போது, ஒரு நீதிபதியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை தி.மு.க. யோசித்து பார்க்க வேண்டாமா? நாடே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு வழக்கில், நீதிபதி வலிய போய் சிக்க வைக்கும் படி செய்திகள் வருவதும், அவரை விடுதலை செய்துவிடுவார் என்று நம்பி பெரும் படையை திரட்டிக் கொண்டு டெல்லி செல்வதும் எத்தனை பெரிய தவறாக முடிந்துவிட்டது.


சரி. கனிமொழி உள்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சி.பி.ஐ. நீதிபதி சைனி, அதற்கான காரணங்களை வெளியிட்டார். அவரது தீர்ப்பை பாருங்கள்.
 கனிமொழி ஜாமீன் கனியாத காரணம் என்ன? A2


1. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களும், அதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் மிகக் கடுமையானவை.

2.நாட்டின் பொருளாதார வளர்ச்சியை புதைக்கும் வகையில் வீழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் குற்றம் நடந்துள்ளது.


3.குற்றவாளிகளில் ஒருவரான கனிமொழி சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்.பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் உள்ளார்.


4.மக்களுக்கான பொது நிதியை அவர் தன் சொந்த நலனுக்காக பயன்படுத்தி இருக்கிறார். இது மாபெரும் குற்றமாகும்.
 கனிமொழி ஜாமீன் கனியாத காரணம் என்ன? A3



5. அவரது ஜாமீன் மனுவில் சட்டப்பிரிவு 437-ன் கீழ் தான் ஒரு பெண் என்பதால் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் பெண் என்ற கற்பனை வாதத்தை ஏற்றுக் கொள்ள இயலாது. அவருக்கு ஜாமீன் வழங்க எந்த ஆதாரமும் இல்லை.


6. முகாந்திரம் இல்லாமல் அவரை விடுவிக்க இயலாது.எனவே அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.



7.சி.பி.ஐ. வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதத்தின் போது, முக்கிய குற்றப்பத்திரிகைக்கும், துணை குற்றப்பத்திரிகைக்கும் வித்தியாசம் இருப்பது போல பேசினார். ஆனால் குற்றப்பத்திரிகைகளிடையே எந்த வித்தியாசமும் இல்லை.சட்டத்தின் பார்வையில் எல்லாம் ஒரே குற்றப்பத்திரிகை தான்.





8.மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், தாங்கள் 5 முதல் 9 மாதங்கள் வரை ஜெயிலில் இருப்பதாக கூறியுள்ளனர். விசாரணை விரைவில் முடியாத சூழ்நிலையில் இருப்பதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று தங்கள் ஜாமீனில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜாமீனில் விடுதலை பெற இது தகுதியான, நல்ல அடிப்படையான காரணம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இது பற்றி நான் மிகவும் கவனமுடன் ஆய்வு செய்து பார்த்தேன்.

 கனிமொழி ஜாமீன் கனியாத காரணம் என்ன? A4


9. சில குறிப்பிட்ட வழக்குகளில், சூழ்நிலைகள் பொருந்தி வரும் போது, பல மாதமாக சிறையில் உள்ளோம் என்ற காரணம் பொருத்தமாக இருக்கும். ஆனால் சில வழக்குகளுக்கு இந்த வாதம் பொருந்தாது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் 409-ன் கீழ் நம்பிக்கைத் துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிக, மிக கடுமையான சட்டப்பிரிவாகும். இந்த பிரிவின் கீழ் அதிக பட்சமாக ஆயுள் தண்டனை கொடுக்க முடியும்.



10.இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு சாதகமாக எந்த மாற்றமும் செய்ய இயலாது. எனவே அனைவரது ஜாமீன் மனுக்களையும் இந்த கோர்ட்டு நிராகரித்து உத்தரவிடுகிறது.

-நீதிபதியின் வார்த்தைகளை பார்த்த பிறகாவது, இந்த வழக்கின் தன்மையை புரிந்துக் கொண்டு தி.மு.க.வினர் அடக்கி வாசிப்பது நல்லது. மீண்டும் மீண்டும் ஜாமீன் மனு போட்டு, தங்களை தாங்களே வதைத்துக் கொள்வது சரியாக இருக்காது.


நன்றி தமிழ் லீடர்
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

 கனிமொழி ஜாமீன் கனியாத காரணம் என்ன? Empty Re: கனிமொழி ஜாமீன் கனியாத காரணம் என்ன?

Post by babuveera Sat Nov 05, 2011 2:06 pm

இதே மாதிரி போபர்ஸ் உழல் வழக்கையும் சி பி ஐ நீதிமன்றத்தில் விசாரிக்கவில்லை ஏன்?நீதிபதி இதில் கூறியிருப்பது அவரோட சொந்த கருத்துக்கள் ?போபர்ஸ் ஊழல் வழக்கு என்ன ஆச்சு ?அதுவும் ""பெரிய பதவியில் இருந்தவங்கதான் செய்தனர்""அதுக்கு தண்டனை இல்லை ?இதுக்கு மட்டும் என்னங்க நியாயம் ?2 ஜி வழக்குமட்டும் ,ராஜா ,கனிமொழி ,மற்றும் 8 பேர் தவிர ,வழக்கு நகரவில்லை ஏன் ..???? Mad Mad Razz Razz Embarassed Embarassed
babuveera
babuveera

Posts : 7
Join date : 28/09/2011
Age : 45
Location : NEW DELHI

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum