உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

அண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனிவா?

Go down

அண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனிவா?

Post by nandavanam on Sat Nov 05, 2011 3:58 am
சென்னை கோட்டூர்புரத்தில் 200 கோடி ரூபாய் செலவில் கடந்த திமுக ஆட்சியில் மிகப் பிரமாண்டன நூலகம் கட்டப்பட்டது.இந்தியாவிற்கு
வந்த அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் அங்கு வந்திருந்தபோது
நூலகத்தை மிகவும் பாராட்டி பேசினார். 8 ஏக்கர் நிலப்பரப்பில் 9 தளம் கொண்ட
கட்டிடமாக அந்த நூலகம் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு
12 லட்சம் புத்தகங்கள் உள்ளன. அங்கு 1,250 பேர் அமர்ந்து படிக்க முடியும்.
தினமும் 1,300 பேர் வந்து செல்கின்றனர். குழந்தைகளுக்கான தனி பிரிவும்
உள்ளது.
பல
நவீன வசதிகள் கொண்ட இந்த நூலக கட்டடத்தை குழந்தைகள் மருத்துவமனையாக
மாற்றப்போவதாகவும். கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு நூலகம்
இடமாற்றம் செய்யப்படும் என்றும் செவ்வாய்கிழமை முதல்வர் அறிவித்திருந்தார்.


இதற்கு
தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் பலமான எதிர்ப்பு கிளம்பியது.
தமிழறிஞர்களும், நூலக வாசகர்களும், பொதுநல வாதிகளும் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர். இதனிடையே நூலகத்தை இடமாற்றம் செய்ய தடை விதிக்கக்கோரி
வழக்கறிஞர்கள் புகழேந்தி, பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்து இருந்தார்கள்.அவர்கள்
மனுவில், இந்த நூலகத்தை மாற்றுவதற்கு அரசு எடுத்த முடிவில் உள்நோக்கம்
இருப்பதாகவும், ‌அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இருப்பதால் நூலகத்தை
இடமாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுருந்தனர்.
அந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.இந்த
மனுவை விசாரித்த நீதிபதிகள் நூலகத்தை இடமாற்றம் செய்வது ஏன்? . குழந்தைகள்
மருத்துவமனை கட்ட வேறு இடம் கிடைக்க வில்லையா? என்று அவர்கள்
வழக்கறிஞரிடம் கேட்டனர். இதனையடுத்து நூலகத்தை இடமாற்றம் செய்ய இடைக்கால
தடை விதித்த நீதிபதிகள், அரசின் முடிவுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ்
அனுப்பவும் உத்தரவிட்டனர்.
சமச்சீர் கல்வியில் செய்த குளறுபடி இதிலேயும் தொடருமா?
இந்த தீர்ப்பை எதிர்த்தும் உச்சநீதி மன்றம் போவார்களா?

எழுதியவர் கருன்
avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Re: அண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனிவா?

Post by babuveera on Sat Nov 05, 2011 1:51 pm

""கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை """இந்த வார்த்தை ஜெயலலிதாவுக்கு பொருந்தும் .தமிழ்நாடு என்ன அரசியல் வாதிகளின் அப்பன் வீட்டு சொத்தா?மக்களோட வரிப்பணம்,மக்களுக்கு நல்லது செய்யத்தான் ஓட்டு,போட்டாங்க ?கருணாநிதியை பழிவாங்கவேண்டும் என்றால் நேருக்கு நேர் சண்டை போட்டுகங்க ...?அதை விட்டு விட்டு மக்களோட வரிபணத்தை வீண் பண்ணாதிங்க ?தமிழ்நாட்டுல இருக்குற எல்லா மருத்துவமனையும் ""நாறிக்கிட்டு இருக்கு ""அதை மொதல்ல சரிபண்ணுங்க !!!!!! affraid
avatar
babuveera

Posts : 7
Join date : 28/09/2011
Age : 40
Location : NEW DELHI

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum