உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

தமிழ்நாடு உருவான வரலாறு

View previous topic View next topic Go down

தமிழ்நாடு உருவான வரலாறு

Post by nandavanam on Mon Oct 31, 2011 3:58 amமாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரை மீது 1956 மார்ச்சில் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தில், மெட்ராஸ் மாகாணத்தின் பெயர் 'தமிழ்நாடு' என் மாற்றபட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மெட்ராஸ் மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக் கோரி உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தவர். க.பெ. சங்கரலிங்கனார்.

1956 செம்டம்பரில் பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்பு மசோதா (அரசியல் அசட்டத்தின் ஏழாம் திருத்தம்) மீதான விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து 1956 - செப்டம்பர் ஆறாம் தேதி இந்த மசோதா பாராளுமன்றத்தில் சட்டமானது. 1956 நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இது அமலுக்கு வரும் என அறிவிக்கபட்டது.

நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டையும் திருவிதாங்கூர் - கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. இவ்வாறு தமிழ்மொழி பேசும் மாநிலமாக 1956 நவம்பர் ஒன்றாம் தேதி 'புதிய மெட்ராஸ் மாநிலம்' பிறந்தது.

1967 ஜூலை 18-இல் மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றும் மசோதா மாநில சட்டபேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. [Madras State (Alevation of name) Act, 1968 (Central Act 53 of 1968)]

1969 ஜனவரி 14-ஆம் தேதி 'தமிழ்நாடு என்னும் பெயர் அதிகாரப்பூர்வமாக நிலவில்(நடைமுறைக்கு) வந்தது.

எழுதியவர்
Thangampalani
avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum