உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

அடுத்து அதிரடியாக பாயப்போவது யாரு? ஸ்டாலினா? பரிதியா?

Go down

அடுத்து அதிரடியாக பாயப்போவது யாரு? ஸ்டாலினா? பரிதியா?

Post by nandavanam on Sun Oct 30, 2011 4:09 amதி.மு.க-வில் நடக்கும் பவர் பாலிட்டிக்ஸ், பரிதி இளம்வழுதியை ஓரம் கட்டியதுடன் முடிந்து விடவில்லை என்கிறார்கள். இந்த விவகாரத்தில் அடுத்த ஓரிரு தினங்களில் மற்றொரு அதிரடி நடவடிக்கையையும் காணலாம் என்கின்றன தி.மு.க. வட்டாரங்கள்.

உட்கட்சிப் பிரச்னை என்று வெளிப்படையாகவே அறிவித்துதான் கட்சியில் தான் வகித்துவந்த துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் பரிதி. தனது ராஜினாமா கடிதம் போனதும் நிச்சயம் ஏதாவது ரியாக்ஷன் இருக்கும் என்றும் எதிர்பார்த்தார்.

இவர் எதிர்பார்த்தது, தலைமையில் இருந்து சமாதான தூது வரும் என்பதை. ஆனால், நடந்தது அதற்குத் தலைகீழ்.

ராஜினாமா கடிதம் கிடைத்தவுடன் ஸ்டாலின், “ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து விடுங்கள். அது மாத்திரமல்ல, அந்த ஆளை கட்சியில் இருந்தே (அடிப்படை உறுப்பினர்) தூக்கி விடுங்கள்” என்று கோபப்பட்டாராம். பேராசிரியரும் கலைஞரும், “உள்ளாட்சித் தேர்தல்கள் முடியட்டும். அதுவரை எதுவும் வேணாம்” என்று சொல்லி விஷயத்தை ஆறப் போட்டனராம்.

ஆனால், ‘கட்சியில் இருந்து தூக்குவது’ என்று ஸ்டாலின் சொன்ன விஷயம் எபபடியோ பரிதியின் காதுவரை போயிருக்கிறது. திகைத்துப்போன அவர் அதற்காகத்தான், “துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினராக தொடர்வேன்” என்று அறிக்கை விட்டார் என்கிறார்கள்.

கலைஞரும், பேராசிரியரும் சொன்ன உள்ளாட்சித் தேர்தலும் வந்து போனது. அது முடிந்த பிறகும், பரிதியை சமாதானப்படுத்தும் முயற்சியை தி.மு.க. தலைமை மேற்கொள்ளவில்லை. மாறாக, ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போதுகூட, “ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதுடன், அவரையும் கட்சியில் இருந்து தூக்கி விடுங்கள்” என்றாராம் ஸ்டாலின்.

அப்படி நடக்கவில்லை என்றாலும், அந்தக் கதையும் பரிதியின் காதுகளுக்கு வந்திருக்கிறது.

இப்போது அதிரடி என்னவென்றால், “இவர்கள் கட்சியில் இருந்து விலத்துமுன் நானாக விலத்தி நோஸ்-கட் கொடுக்கலாமா?” என்று பரிதியும், “அவர் ஏதாவது செய்யுமுன் ஆளை தூக்கி விடலாமா?” என்று ஸ்டாலினும் ஆலோசனை செய்யத் தொடங்கியுள்ளார்கள் என்கிறார்கள்.

இதற்கிடையே சந்று தாமதமாகத்தான் விபரீதத்தை புரிந்து கொண்ட கலைஞர், “தற்போதைக்கு ஆக்ஷன் எதுவும் வேண்டாம்” என்று இரு தரப்புக்கும் தனது நம்பிக்கையான ஒருவரை அட்வைஸ் செய்ய அனுப்பியிருக்கிறாராம். இதற்குள் மற்றொரு விவகாரமாக, கலைஞர் அனுப்பி ‘நம்பிக்கைக்குரிய நபர்’ சென்னையில் வசித்தாலும், அவர் அழகிரி ஆதரவாளர் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம்.

அடுத்து அதிரடியாக பாயப்போவது யாரு? ஸ்டாலினா? பரிதியா? அல்லது அட்வைஸோடு அடங்கி விடுவார்களா?

நன்றி விறுவிறுப்பு
avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum