உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அ.தி.மு.க.-விலும், ம.தி.மு.க.-விலும் டில்லியில் இருந்து ஒரு ‘கண்’!

Go down

அ.தி.மு.க.-விலும், ம.தி.மு.க.-விலும் டில்லியில் இருந்து ஒரு ‘கண்’! Empty அ.தி.மு.க.-விலும், ம.தி.மு.க.-விலும் டில்லியில் இருந்து ஒரு ‘கண்’!

Post by nandavanam Sun Oct 30, 2011 4:06 am

அ.தி.மு.க.-விலும், ம.தி.மு.க.-விலும் டில்லியில் இருந்து ஒரு ‘கண்’! Tu_30911

அகில இந்திய அரசியல் பார்வைகள் தமிழகத்தின் பக்கமாக பதிவது குறைவு. சமீப காலமாக தமிழகம் பற்றி டில்லி பத்திரிகைகளில் செய்திகள் அடிபடுவதன் காரணம், பெருமைப்படக்கூடிய விஷயத்தில் அல்ல, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரமாகத்தான்!

மூன்று விஷயங்களுக்காக பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தின் பக்கமாக சீரியஸான பார்வை ஒன்றை செலுத்த தீர்மானித்துள்ளது என்ற தகவல் டில்லி அரசியல் வட்டாரங்களில் அடிபடுகின்றது.

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் இருந்த இடம் தெரியாமல் போய்விட, பா.ஜ.க. பேர் சொல்லும் வகையில் பெற்றுள்ள வெற்றி முதல் விஷயம். தமிழத்துக்குள் பா.ஜ.க.வை ஃபிரெஷ் அறிமுகம் செய்யக்கூடிய சூழ்நிலை இது என்று பா.ஜ.க. தலைமை நினைக்கிறது என்கிறார்கள்.

இரண்டாவது காரணம், தமிழக மீனவர் பிரச்சினை. ஸ்ரீலங்கா கடற்படையுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ள இந்த விவகாரத்தை டில்லி அரசியலுக்காக பா.ஜ.க. கையில் எடுத்துக்கொள்ள போகின்றது என்கிறார்கள். இது லோக்கல் பிரச்சினை அல்ல, தேசிய பிரச்சினை என்ற கோஷத்துடன் பா.ஜ.க. இதைக் கையாளப்போகின்றது என்று தெரிகின்றது.

முன்றாவது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழுபறி நிலை. இவ்வளவு காலமும் இந்த விஷயத்தில் தாமரை இலை தண்ணீர் துளி போல இருந்துவந்த பா.ஜ.க., நிலைமையைப் பார்த்து குரல் கொடுக்க திட்டமிட்டுள்ளது என்று தெரியவருகின்றது.

எமக்கு கிடைத்த தகவலின்படி, பா.ஜ.க. மிக சீரியசாகவே முதல் இரு விஷயங்களிலும் இறங்க முடிவு செய்திருக்கின்றது. ராஜிவ் கேஸ் மாத்திரம், தலைமையில் முடிவு எடுக்க முடியாமல், விவாதத்தில் உள்ளது.

இரு தினங்களுக்குமுன் மதுரையில் பேசிய அத்வானி, “ஸ்ரீலங்காவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அந்தத் திட்டத்துக்கு என்ன ஆயிற்று? தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இது உள்ளூர் பிரச்னை அல்ல. தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்னை. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை நாங்கள் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்’’ என்றார்.

இதுதான் நாம் குறிப்பிட்ட இரண்டாவது காரணம்.

இந்த இரண்டாவது காரணத்தில் சீரியசாக இறங்கினாலே போதும், முதலானது சுலபமாக கைவரும் என்பது பா.ஜ.க. தலைமையின் திட்டம் என்கிறார்கள் டில்லியில். தமிழக மீனவர்களுக்காக மத்தியில் பா.ஜ.க. வழமைக்கு அதிகமாக பேசத் தொடங்க, அதை வைத்து லோக்கலில் ஆதரவு வளையத்தை பில்ட் பண்ணுவது பற்றியும், கூறப்படுகின்றது.

என்ன காரணம்? தமிழகத்தில் கட்சிகளின் காட்சிகள் தற்போதுள்ள நிலையில், ஓரளவு பலம் காட்டினால், அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சாத்தியம் என்று கணித்திருக்கிறார்களாம் அவர்கள்.

டில்லி வட்டாரங்களில் நாம் கேள்விப்பட்ட வரையில், தமிழகத்தில் அ.தி.மு.க. – பா.ஜ.க. – ம.தி.மு.க. கூட்டணி ஒன்று அமைவது எந்தளவுக்கு சாத்தியம் என்பது குறித்து பா.ஜ.க. மிகமிக சீரியசாக ஆராய்கிறது!

நன்றி விறுவிறுப்பு
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum