உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

தேமுதிக உடைகிறது..?????

View previous topic View next topic Go down

தேமுதிக உடைகிறது..?????

Post by nandavanam on Thu Oct 20, 2011 3:36 am

எழுதியவர் T.V.ராதாகிருஷ்ணன்

அரசியலில் ஒரு கட்சியைக் கவிழ்க்க வேறொரு கட்சி ஏதேனும் வதந்தியை பரப்பி விடுவது வழக்கம்.இப்போது வேகமாக பரவி வரும் வதந்தி..தேமுதிக அவைத்தலைவரும்,கட்சியின் மூத்த அரசியல்வாதியும் ஆன பண்ருட்டி ராமசந்திரன் 10 கட்சி எம் எல் ஏ க்களுடன் அதிமுகவிற்கு தாவப்போவதாகக் கூறப்படுவது..

உள்ளாட்சித் தேர்தலில் ஜெ தேமுதிக வை முற்றிலும் புறக்கணித்தார்.சட்டசபைத் தேர்தலில் அதிமுக வுடன் விஜய்காந்த் கூட்டணி அமைத்ததற்கு முக்கியக் காரணம் பண்ருட்டியார் என்பதால்...இம்முறை அதிமுக தங்களைப் புறக்கணித்ததால் கோபத்தை பண்ருட்டியார் மேல் காட்டினாராம் கேப்டன்.ஆகவே தான் உள்ளாட்சித் தேர்தலில் பண்ருட்டியாரை பிரச்சாரத்திற்குக் கூட அழைக்கவில்லையாம்

இந்நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பண்ருட்டியாரை அதிமுகவிற்கு இழுக்கும் வேலைகள் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மொத்தம் தேமுதிகவில் 29 எம் எல் ஏ க்கள் உள்ளனர்.10 பேர் இதில் அணி மாறினால் கட்சித் தாவல் திட்டம் பாயாது.மேலும் தேமுதிக வில் அப்போது 19 எம் எல் ஏ க்களே மிஞ்சி இருப்பர்.எதிர்க்கட்சி அந்தஸ்தை அது இழக்கும்.

தேமுதிக வை எதிர்கட்சியாய் வைத்து அரசியல் பண்ணுவதோடு திமுக வே எதிர்க்கட்சியாய் இருக்கட்டும் என முதல்வர் நினைத்திருக்கலாம்.உண்மையில் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகளை கழட்டிவிட்டதற்கு இதுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
தன் ஆட்சியின் 100 வது நாள் நிகழ்ச்சியில் விஜய்காந்த் கலந்துக் கொள்ளாததும்...தன் கட்சியின் ஆட்சி பற்றி 6 மாதம் கழித்து விமரிசிப்பதாகவும் சொன்னது வேறு ஜெ விற்கு அதிருப்தியைத் தந்துள்ளதாம்

அரசியலில் எது வேணும்னாலும் நடக்கலாம்.

எழுதியவர் T.V.ராதாகிருஷ்ணன்
avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Re: தேமுதிக உடைகிறது..?????

Post by babuveera on Thu Oct 20, 2011 6:30 pm

உண்மையை சொல்லபோனால் ""தே மு தி க இல்லை என்றால் அதி மு க ஆட்சியை பிடிக்க முடியாது""எதிர்காலத்தில் அதி மு க என்ற கட்சியே இருக்காது ,எப்படி என்றால் ஜெயலிதாவுக்கு அப்புறம் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் யாரும் இல்லை .அடுத்த தேர்தல் பார்த்திங்கன்ன தி மு க கண்டிப்பாக ஜெய்க்கும் .இலவசங்கள் தமிழ்நாட்டில் எடுபடவில்லை .பண்ருட்டி அதிமுக போனால் கூட பெரிய பாதிப்பு இருக்காது .அங்க போனால் அவரு டம்மி பீஸ் .அவரு கூடையும் எந்த எம் ல் எ வும் போகமாட்டார்கள் .இது வந்து வதந்தி .
avatar
babuveera

Posts : 7
Join date : 28/09/2011
Age : 39
Location : NEW DELHI

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum